
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். திருச்சியில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்த பெண்ணை தாக்கி வழிப்பறியில் ஈடுபடும் வீடியோவை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள பதிவில், திருச்சியில் நடை பயிற்சிக்கு சென்ற பெண்ணை தாக்கி நடு ரோட்டில் தரதரவென இழுத்துச் சென்று பட்டப்பகலில் வழிப்பறி செய்திருப்பது நெஞ்சை பதற வைக்கிறது.
யாருக்கும் எதற்கும் அஞ்சோம் என்ற மனநிலையில் தமிழகத்தில் ரவுடிகளின் மனநிலை அதிகரித்துள்ளது. சகோதரியை இழந்து துயரத்தில் இருக்கும் அன்பு சகோதரர் தங்கமணி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். திருமதி நாகரத்தினம் அவர்களுடைய ஆத்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் எது நடந்தாலும் சட்டம் ஒழுங்கு அடியோடு அழிந்து போனாலும் முதலமைச்சரின் காதுகளுக்கு எட்டுவதே கிடையாது என்பது வேதனைக்குரிய விஷயம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
திருச்சியில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணை தாக்கி,
நடுரோட்டில் தரதரவென இழுத்து
சென்று,பட்டபகலில் வழிப்பறி செய்திருப்பது நெஞ்சை பதற வைக்கிறது,யார்க்கும்-எதற்கும் அஞ்சோம்
எனும் மனநிலையில் தமிழகத்தில் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளது,1/2 pic.twitter.com/VEy5DrEbqG— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) March 16, 2023