
இன்றைய காலகட்டத்தில் திரை உலகில் இருக்கும் பிரபலங்கள் காதலிப்பது, திருமணம் செய்து கொள்வது, அதன் பின் விவாகரத்து என்பது எல்லாம் சாதாரணமாக உள்ளது. பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நீலம் கோத்தாரி. இவர் தனது முதல் திருமண விவாகரத்து குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். இவர் தனது முதல் கணவரை தனது 2011 ஆம் ஆண்டு பிரிந்தார். அதன் பின் பாலிவுட் நடிகர் சமீர் சோனியை மறுமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு அஹான என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நீலம் கோத்தாரி பேட்டி ஒன்றில், நான் முதல் திருமணத்திற்கு இங்கிலாந்துக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. அங்கே தங்கினேன். எனது முன்னால் கணவர் என்னை இந்திய உடை அணிய வேண்டும், அசைவம் சாப்பிடக்கூடாது, மது அருந்தக்கூடாது என்று கூறினார். அவர் சொல்வதை எல்லாம் நான் கேட்டேன். ஒரு கட்டத்தில் என்னுடைய பெயரை மாற்ற வேண்டும் என்று கூறினார். நான் மொத்தமாக மாறி இருப்பதை பார்த்து நானே எனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டேன். அதனால் தான் அவரை விவாகரத்து செய்து விட்டேன் என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.