நெல்லையில் உள்ள பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கால்நடை பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார். இவருக்கு ஒரு ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியின் 2-வது மகள் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு தான் வேலை செய்யும் கஜேந்திரன் என்பவர் வீட்டிற்கு பராமரிப்பு பணிக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு மின் கசிவு ஏற்பட்டு கஜேந்திரன் மகன் வேலாயுதம் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார்.

அவரைக் காப்பாற்ற சென்ற சுப்ரமணியும் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்த மாணவிக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது. தந்தை இறந்த தகவல் அறிந்த அவர் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.