ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலின் எதிரொலியாக இந்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன்படி இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் மக்களை நாடு திரும்பும் படி உத்தரவிட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் மக்கள் தங்களது நாட்டிற்கு திரும்பினர். ஆனாலும் கொடுக்கப்பட்ட காலத்திற்குள் சில பாகிஸ்தான் மக்கள் மருத்துவம் மற்றும் படிப்பின் காரணமாக வெளியேறாத நிலை ஏற்பட்ட காரணத்தினால் அவர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

அதன்படி பாகிஸ்தான் மக்கள் இந்தியாவில் இருந்து வெளியேறி வரும் நிலையில் அட்டாரி வாகா எல்லையை திடீரென பாகிஸ்தான் அரசு மூடியுள்ளது. இதனால் பாகிஸ்தானிற்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் பெண் ஒருவர் எல்லையில் நின்று ” என்னை  விடுங்கள். என் குழந்தை அழுது கொண்டிருக்கிறது. நான் என் பிள்ளைகளிடம் செல்ல வேண்டும். என்னையையும் என் குழந்தையையும் பிரிக்காதீர்கள்” என்று கண்ணீரோடு கூறினார்.

மேலும் திடீரென அட்டாரி வாகா எல்லையை அறிவிப்பு எதுவும் இல்லாமல் பாகிஸ்தான் அரசு மூடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.