பிரதமர் மோடி 2 நாள் அரசு பயணமாக குவைத் சென்றுள்ளார். வளைகுடா நாட்டிற்கு இந்திய பிரதமர் மோடி 43 வருடத்திற்கு பிறகு செல்கின்றார். இவர் அங்கு சென்று குவைத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார். இந்நிலையில் அவர் குவைத் செல்கிறார் என்று தெரிய வந்ததும், எக்ஸ் பயனர் ஒருவர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் பிரதமர் மோடிக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், என்னுடைய 101 வயது தாத்தா குவைத்தில் வசித்து வருகிறார். அவர் முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரி, நீங்கள் இந்திய வம்சாவளியை சந்திக்கும் போது, அவரையும் சந்திப்பீர்களா என்று கேட்டிருந்தார்.

மேலும் அவர் உங்களுடைய மிகப்பெரிய பிரியர் என்றும், மற்ற பிற விவரங்கள் அனைத்தையும் உங்களுடைய அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன் என்றும் தெரிவித்தார். இதுக்கு பிரதமர் மோடி நிச்சயமாக நான் உங்கள் தாத்தா மங்கல் செயின் ஹண்டாவை சந்திக்க எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் குவைத் சென்ற பிரதமர் மோடி மங்கல் செயின் ஹண்டாவை சந்தித்தார். அதோடு ராமாயணம் மற்றும் மகாபாரத்தை அரபிக் மொழியில் வெளியிட்ட அப்துல்லாதீப் அல்னெசெஃப், மொழிபெயர்த்த அப்துல்லா பரோன் ஆகியோரையும் சந்தித்தார்.