குஜராத், ஜாம்நகர் மாவட்டம் சம்ரா கிராமத்தில் பானுபென் டோரியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. தனது குழந்தைகளுடன் வசித்து வந்த அவர் நேற்று தன் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். முதலில் தனது 4 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிவிட்டதை தொடர்ந்து தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சில மணி நேரங்கள் கழித்து குழந்தைகளின் உடல்கள் கிணற்றில் மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கிணற்றில் இருந்த 5 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.