மத்திய பிரதேச மாநிலம் போபால், இந்தூர், குவாலியர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி நடத்தியுள்ளனர். அதில் 3 மாவட்டங்களில் மொத்தம் 52 இடங்களில் பல்வேறு குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கண்ட போது ஏராளமான நகைகள், முக்கிய ஆவணங்கள், மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சோதனை நடத்த நிறுவனங்களின் வங்கி லாக்கரை திறந்து சோதனை செய்த போது அதிலிருந்த ரூபாய் 5 கோடி ரொக்க பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தலைநகர் போபால் அருகே மேன்டோரா கிராம வனப்பகுதியில் ஒரு வாகனம் அனாதையாக நின்று கொண்டிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் காவல்துறையினரின் உதவியுடன் அங்கு சென்று சோதனை  நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் வாகனத்தில் கட்டு கட்டாக பணம் இருப்பது தெரிய வந்தது. மேலும் ரூபாய் 10 கோடி ரொக்க பணம் மற்றும் 52 கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வருமான வரி சோதனைக்கு பயந்து ரூபாய் 10 கோடி பணத்தை அதிக நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் நிறுத்தி சென்று இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.