
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இன்னைக்கு தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற ஸ்டாலின் அழைக்கிறார்… யாரை ஏமாத்த ? உங்களை எல்லாம் நம்பித்தான் தமிழ்நாடு போதை பொருள் காடாக மாறி இருக்கு. ஆகவே எல்லா வளர்ச்சி திட்டங்களையும், இதுவரை இந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் 60,000 கோடிகளுக்கு மத்திய அரசாங்கம் திட்டங்களை கொடுத்திருக்கிறது.
அது மட்டுமல்ல சாதாரண விஷயம் ஏழை – பாழைகள் இரவு பசி இல்லாமல் உணவருந்துகிறார்கள் என்று சொன்னால், அது இந்த அன்னபூரணி ஆட்சி, மோடி அவர்கள் ஆட்சி தான்…. ஏன்னா கொரோனா வந்ததிலிருந்து 2020 ஏப்ரல் இருந்து, இன்னைக்கு வரைக்கும் அதை 5 ஆண்டுகளுக்கு எக்ஸ்டெண்ட் பண்ணி இருக்கோம். ஒரு ஒரு நபருக்கும், ஒரு கார்டுக்கு இல்ல…. ஒரு நபருக்கும் ஐந்து கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு … அந்த மாதிரி மக்களை இரட்சிக்கின்ற,
ஏழை – எளிய மக்களுக்காகவே இருக்கின்ற ஒரு ஆட்சியாக இன்னைக்கு மாண்புமிகு பிரதமர் மோடி அவரின் அரசாங்கம் இருக்கு. இதையெல்லாம் மறைத்து, மக்களிடம் வித்த காட்டலாம் அப்படின்னு, கம்பியில் டான்ஸ் ஆடுவார்கள் அல்லவா, அவுங்க மாதிரி எல்லாம் என்னமோ வித்த காமிச்சிட்டு இருக்காரு ஸ்டாலின். அதெல்லாம் எடுபடாது. ஆகவே இந்த முறை மக்கள் வளர்ச்சிக்காக… தமிழகத்திற்காக… தமிழ் மொழிக்காக…. தமிழ் மக்களுக்காக… தமிழ் கலாச்சாரத்திற்காக…. அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கும் மாண்புமிகு பிரதமரின் தலைமைக்கு வாக்களிப்பார்கள் என்று என்னுடைய முழு நம்பிக்கை என தெரிவித்தார்.