
செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கட்சியின் தலைமை தான் வேட்பாளர்களை முடிவு பண்ணும். ஒரு மகளிர் அணி தலைவராக…. இது எங்களுக்கு மூன்றாவது மாநாடு. இதற்கு முன்பாக முதல் மாநாடு செங்கல்பட்டுல நடந்தது, காஞ்சிபுரம் தொகுதி… இரண்டாவது மாநாடு ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் நடந்தது. அங்கேயும் நான் தான் சிறப்பு விருந்தினர். இது மூன்றாவது மாநாடு.
நாடு முழுக்க எல்லா தொகுதிகளிலும் மாநாடு நடத்துவது என்னோட வேலை. அதனால இங்க பணியை மகளிர் அணி ஆரம்பித்திருக்கிறார்கள். கட்சியில் மற்ற அணிகளின் மாநாடும் நடக்க இருக்கிறது. நாளைக்கு விவசாய அணி மாநாடு வச்சிருப்பாங்க… யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம் என சொல்லிட்டேன், அப்பறம் யார் கூட்டம் நடத்தினால் என்ன ?
ஒவ்வொரு இடத்திலும் மக்கள் பிரதிநிதிகள் மக்களை அடிக்கடி சந்திப்பது அவர்களுடைய பிரச்சினைகளை பேசுவது இல்லை என்று சொன்னால், மக்களுடைய கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். பிரதமர் வருகை என்பது தமிழகத்துக்கு நிச்சயமாக, பாராளுமன்ற தேர்தலை ஒட்டி வரத்தான் போகிறார். இதுவரை தேதி அப்படிங்கறது உறுதியாக வில்லை. எங்களுக்கு இன்னும் உறுதியான தகவல் வரவில்லை. அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது என பேசினார்.