
SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு சிறுபான்மை மக்களுக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கின்றோம். இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால், புனித ரமலான் மாதத்தில் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா இருந்தபோது….
இஸ்லாமிய பெருமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அந்த ரமலான் மாத காலத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க விலையில்லா அரிசி வழங்கிய அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம். ஆண்டுக்கு 5,300 மெட்ரிக் டன் அரிசி கொடுத்தோம். அதை இன்னைக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போல 2001 ஆம் ஆண்டு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா தலைமையான ஆட்சியில் நாகூர் தர்கா, சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தன கட்டைகளை விலையில்லாமல் கொடுத்த அரசு அண்ணா திமுக அரசு தான்.
2018 வரை ஹெச் புனித பயணம் மேற்கொள்ள மத்திய அரசு நிதி வழங்கி கொண்டு வந்தது. 2019 ஆம் ஆண்டு திடீரென்று அந்த ஹெச் புனித பயணம் மேற்கொள்ள நிதி நிறுத்தப்பட்டு விட்டது. என்னிடத்திலே இஸ்லாமிய பெருமக்கள் வந்து, நிறுத்தப்பட்ட நிதி மீண்டும் திருப்பி நீங்கள் தொடர வேண்டும் என்று கேட்டார்கள். அவர்களை கோரிக்கையை ஏற்று, அம்மாவுடைய அரசு ஹெச் புனித பயணம் மேற்கொள்வதற்கு மாநில அரசு நிதியில் இருந்து தொடர்ந்து நாங்கள் வழங்கினோம்.
அதற்குப் பிறகு 2021ஆம் ஆண்டு ஹெச் புனித பயணம் மேற்கொள்ள அந்த நிதி போதாது என்று கேட்டார்கள். அந்த நிதியை உயர்த்தி 12 கோடி ஆக நாங்கள் வழங்கி இருக்கிறோம். அப்பொழுது 8,166 இஸ்லாமிய சகோதர பெருமக்கள் ஹெச் புனித பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள். ஹெச் புனித பயணம் செல்வதற்கு சென்னையிலே தங்கி செல்ல இஸ்லாமிய பெருமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க…. மாண்புமிகு அம்மா அரசு, சென்னையிலே ஹெச் இல்லம் கட்டுவதற்கு 15 கோடி ரூபாய் அம்மாவுடைய அரசு தான் அந்த திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்தது என பேசினார்.