
மகாராஷ்டிராவின் மீரா சாலையில், மொழிச்சார்ந்த விவகாரத்தில் மரியாதைக்கேடான அதிர்ச்சிக்குரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், துரித உணவகம் ஒன்றில் வேலை செய்த ஊழியர் ஒருவர் மராத்தி மொழி பேசாததற்காக அவரை பலமுறை அறைந்தனர். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பதிவாகி வீடியோ வைரலாகி வருகிறது. இது திங்கள்கிழமை இரவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தியில் பதிலளித்ததாக ஊழியரிடம் கோபம் கொண்ட எம்என்எஸ் தொண்டர்கள், அவரிடம் பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் தாக்குதல் நடத்தியதாக காட்சிகள் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், குறைந்தது 2 எம்என்எஸ் தொண்டர்கள், ஊழியரை முன்னெச்சரிக்கையும் இல்லாமல் தாக்குவது, அந்த இடத்தில் இருந்தவர்களில் சிலர் அதனை மொபைலில் படம் பிடித்ததும் தெளிவாக தெரிகிறது. இது மீரா சாலையில் பொது இடத்தில் பயத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.
मीरारोड में भाषा विवाद: मराठी बोलने से इनकार पर मनसे कार्यकर्ताओं ने की दुकानदार से मारपीट, सात पर FIR
महाराष्ट्र के मीरारोड स्थित एक मिठाई की दुकान में मराठी भाषा में बात न करने को लेकर मनसे कार्यकर्ताओं ने दुकानदार से मारपीट की। घटना का वीडियो वायरल हुआ, जिसके बाद काशिमीरा… pic.twitter.com/Kj3yV2jnvO
— AajTak (@aajtak) July 1, 2025
இது முதல் தடவையாக அல்ல – ஏற்கனவே பல இடங்களில் வடஇந்தியர்கள் மீது தாக்குதல் நடத்திய பின்னணியில், தற்போது மீண்டும் இதுபோன்று ஒரு சம்பவம் ஏற்பட்டுள்ளது. மும்பையில் இந்தியை பேசுவதற்காக தாக்கப்படுவது வழக்கமானதாய் மாறிவருவதை பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அரசியல் வட்டாரத்தில் இது இந்தி vs மராத்தி விவாதம் தீவிரமடைந்துள்ளதற்கு சான்றாக பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், இந்தியை மூன்றாவது மொழியாக்கும் அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் அழுத்தம் கொடுத்ததையடுத்து முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அதனை ரத்து செய்துள்ளார். இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஜூலை 5ஆம் தேதி நடைபெறவுள்ள விஜய் பேரணியை முன்னிட்டு, தாக்கரே சகோதரர்கள் இருவரும் ஒருங்கிணைந்துள்ள நிலையில், மீரா சாலை சம்பவம் அரசியல் சூழ்நிலையையும் பதற்றமடைய செய்துள்ளது.
இந்நிலையில், இதுவரை காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை, எம்என்எஸ் தொண்டர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் மொழிச்சார்ந்த பாகுபாடு, மற்றும் சட்டத்தை மீறும் செயல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முந்தைய முதல்வர் ஃபட்னாவிஸ் கூறியிருந்தாலும், நடைமுறை என்ன என்பது தற்போது கேளிவிக்குறியாக மாறியுள்ளது.