
கோவையில் பாஜக MLA வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் அடையாளம் தெரியாத ஒரு நபர் நுழைந்தார். இதையடுத்து அலுவலகத்திற்குள் நுழைந்து கதவை அடைக்க முயன்ற அந்நபரை அலுவலக பணியாளர் எச்சரித்து வெளியில் தள்ளியுள்ளார். வெளியேற்றப்பட்ட நபர் சில மணி நேரத்திலேயே கோவை அண்ணா சிலை சிக்னல் அருகில் விபத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.