தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் “குபேரா” என்ற படத்தில் நடித்து முடித்த நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.

தற்போது  நடிகர் தனுஷ் “தேரே இஷ்க் மெயின் “மற்றும் “இட்லி கடை” போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியானது.

 

View this post on Instagram

 

A post shared by Dhanush (@dhanushkraja)

அந்தத் திரைப்படம் முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு எடுக்கப்பட இருப்பதாக உள்ள நிலையில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான பதிவை தனது instagram பக்கத்தில் நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார்.

இந்தத் திரைப்படத்திற்கு “கலாம் : மிசைல் மேன் ஆஃப் இந்தியா” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், இயக்குனர் ஓம் ராவத் இயக்க இருக்கிறார். மேலும் இந்த திரைப்படம் அப்துல் கலாம் எழுதிய ”அக்னி சிறகுகள்” புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.