
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் கூறுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை செலுத்த வேண்டிய நிலுவை தொகை ரூபாய் 1.5 கோடி ஆகும். இந்த நிலையில் இந்த நிலுவைத் தொகையை செலுத்தவில்லை எனில் பிஎஸ்என்எல் சேவை துண்டிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பள்ளி மற்றும் தொழிற்கல்வி இணைய இயக்குனர் கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு எந்தவித நிலுவை தொகையும் செலுத்த வேண்டியது இல்லை என பொய் கூறியுள்ளார். அப்போது பள்ளி மற்றும் தொழில் கல்வி இணை இயக்குனர் பொய் சொல்கிறாரா? என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் திமுக அரசு சாதாரண நிகழ்வை கூட சாதனை சாதனைப் போல காட்டி விளம்பரப்படுத்துகிறது. ஆனால் எந்த துறையுமே தங்களுக்கான பணிகளை திறம்பட செய்வதில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்களது கட்சியின் வரட்டு கௌரவத்தை காப்பாற்றுவதற்காக மீண்டும் மீண்டும் பொய் கூறுவதை நிறுத்திவிட்டு மாணவர்களின் கல்வி மேம்பாடு அடைய இணைய இணைப்புகளின் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.