
தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அமைச்சர் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டிருக்க கூடிய நம்முடைய அரசு பொது மருத்துவமனையில் தண்ணீரால் cath lab பாதிக்கப்பட்டிருக்கிறது. அது கிட்டத்தட்ட 6 கோடிக்கான மிஷின்… மத்தத பொருட்களை….. தேவைப்படக்கூடிய கருவிகள் எல்லாம் பத்திரமாக, பாதுகாப்பான இடத்திற்கு….. டாக்டராக இருக்கட்டும்….
பணியாளர்களாக இருக்கட்டும்…. மருத்துவர்களாக இருக்கட்டும்…. அதை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்… பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவ தேவைகள் எல்லாம் சரி செய்யப்பட்டிருக்கிறது. அமைச்சரும், நம்முடைய செயலாளர்களும் அதை சரி செய்து இருக்கிறார்கள். இன்னையிலிருந்து டயாலிசிஸ் கூட தூத்துக்குடி ஹாஸ்பிடலில் ஸ்டார்ட் ஆயிடும்.
தூத்துக்குடியில் கிட்டத்தட்ட 20 PHயும், 140 துணை சுகாதார நிலையங்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட இடங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அங்கு சுவர் உடைந்து இருக்கக்கூடிய சூழல்…. விரிசல் விட்டு இருக்கு….. சில பாகங்கள் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கு…. பாதிப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடிய இடங்கள் எல்லாம் கணக்கெடுத்து, என்னென்ன பாதிப்புகள் என்று ? அதற்கு என்ன எஸ்டிமேட் என்று போட்டு…
விரைவில் கொடுத்து, அதற்கான நிதியையும் வாங்கி… அதையெல்லாம் சரி செய்வதற்காக அமைச்சர் அவர்களும், அதிகாரிகளும் இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவ வசதிகளை பொறுத்து விரைவில் எல்லா பணிகளும் நிறைவடையும்…. அதுமட்டுமில்லாமல் விரைவில் நாங்கள் இன்னும் கூடுதலாக வைத்திருக்கக்கூடிய கோரிக்கைகளையும் அமைச்சர் செய்து தருவதாக கூறியுள்ளார்.