உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல்வாதியுமாக இருந்தவர் மாயவாதி நைனா குமாரி. இவர் தனது அரசியல் வாரிசாக தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். மேலும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியும் ஆகாஷ் ஆனந்திற்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் மாயவாதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை பொறுப்பில் இருந்து நீக்கினார். ஆனால் சில வாரங்களிலேயே மீண்டும் ஆகாஷ் ஆனந்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆகாஷ் ஆனந்த் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதில் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான ராம்ஜி கௌதமிற்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து மாயாவதி கூறியதாவது, “இனி நான் எனது அரசியல் வாரிசை  அறிவிக்கப் போவதில்லை. கட்சி விவகாரங்கள் அனைத்தையும் நானே பார்த்துக்கொள்வேன்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.