அமெரிக்காவில் பிரையன் ஜான்சன் (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தொழிலதிபர். இவர் தனது வயது முதிர்வதை தடுக்க பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் மனிதர்களின் ஆயுள் காலத்தை 150 ஆண்டுகளாக உயர்த்தலாம் என்று கூறி பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் ப்ராஜெக்ட் பேபி ஃபேஸ் என்று சிகிச்சை செய்ய முடிவுசெய்தார்.

இதற்காக, டோனர் ஒருவர் வழங்கிய கொழுப்பை செலுத்தியுள்ளார். அதன் பிறகு அவரது முகத்தில் சிறிது மாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது. அதாவது அவரது முகம் கொஞ்சம் கொஞ்சமாக வீக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது பக்கத்தில், அவரது முகத்தை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.