
தன்னை விஷால் மகன் என கூறிக்கொண்டு இளைஞர் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
புரட்சித் தளபதி என அழைக்கப்படும் விஷால் மற்றும் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் இன்று வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, வெளியான முதல் நாளில் 13 கோடி ரூபாய் என்ற வசூலை ஈட்டி உள்ளது. இது விஷால் அவர்களின் சினிமா கெரியரில் முதல் நாளில் அதிக கலெக்க்ஷன் செய்த படமாகும். இத்திரைப்படத்தின் ட்ரெய்லரில் படம் டைம் டிராவல் தொடர்பாக இருப்பதாக தெரிய வருகிறது. இந்நிலையில் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்யும் ரசிகர்களில் ஒருவர்,
நான் விஷால் அவர்களின் மகன். எனது தந்தையின் கம்பேக் படத்தை பார்ப்பதற்காக டைம் டிராவல் செய்து வந்துள்ளேன். என்னுடைய பெயர் விஜய் சந்திர விஷால். இப்படத்திற்கான பார்ட் 2 விரைவில் வெளியாகும் அதையும் நான் பார்த்து விட்டேன் என தெரிவித்துள்ளார். மேலும் லியோ படம் பார்த்து விட்டீர்களா ? என எதிர் முனையில் இருப்பவர் கேட்க, படம் பார்த்துவிட்டேன் அதில் ஏராளமான இன்ப அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. அதை கூறினால் தளபதி ரசிகர்கள் கோபப்படுவார்கள். அதனால் அதை நான் கூற விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இவர் படம் குறித்து நகைச்சுவையாக பேசிய வீடியோ தொகுப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#Vishal‘s son review for #MarkAntony
Also speaks about #Leo @VishalKOfficial @iam_SJSuryah @Adhikravi @gvprakashpic.twitter.com/XZJOpmQJNt
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) September 16, 2023