
தமிழ் சினிமாவில் பிரியம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் மந்த்ரா. மேலும் இவர் விஜய் அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இதை அடுத்து கிளாமர் ரோல்களில் நடித்து வந்தார் நடிகை மந்த்ரா. பின்னர் பிரபல இயக்குனர் ஸ்ரீமுனி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சினிமாவை விட்டு விலகினார். திருமணம் ஆன பிறகு சில ஆண்டுகள் கழித்து தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் உடல் எடையை குறைத்தது குறித்து முதல் முறையாக பேசியுள்ளார். 3 வேளைக்கு வெவ்வேறு சாப்பாடை 6 வேளைக்கு பிரித்து சாப்பிடுவேன். நிறைய தண்ணீர் குடிப்பேன். வேகமாக ஓடுவதுடன் அதிகாலை 4:30 மணிக்கு நீச்சல் குளத்திற்கு சென்று விடுவேன். கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவை காரணமாக 95 கிலோவிலிருந்து 62 கிலோவாக குறைத்தேன் என அவர் கூறியுள்ளார்.