
செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், சென்சார் போர்டுல அங்க டீ தெரியுதுங்க…. மறுபடியும் அழிச்சு கொண்டு வாங்க.. இல்லைங்க, அது, அத்வானி, ஆமா, அந்த பெயரில் லைட்டா வானி தெரியுதுங்க. அம்பானினு மாத்துனேன். இல்ல, இல்ல, “னி”-னே வரக்கூடாது. அப்படி ராஜவிஷ்வாசிகளாக இந்திய சென்சார் போர்டுல இருக்காங்க. இப்ப நேத்து இல்ல…தமிழ்நாட்டுக்குனு இல்லைங்க….ஒட்டு மொத்த இந்தியாவுக்கே, ஒரு அதிகாரம் கடிவாளம் இருக்கணும். அவர்கள் எல்லாமே ஒரு கர வேஷ்டியை கட்டிட்டு தான் எட்டு பேர் உள்ள வாரங்க… அதை தவறுங்குறேன்.
ரொம்ப ரொம்ப முக்கியமான பாயிண்ட்… நான் சொன்னது, ”சுத்திகரிக்கப்பட்ட இந்தியா”.பிரதமர் என்னமோ கிளீன் இந்தியா, கிளீன் இந்தியா என சொல்லுறாரு. ஜாதிவாரி கணக்கெடுப்பு உடனடியா நடத்துங்க. நடத்துததுலன்னா எந்த தப்பும் இல்ல. இங்க எல்லாமே பாதிக்கப்பட்டு இருக்கின்றோம். நீங்க இட ஒதுக்கீடு அது வருது, இது வருது ஏமாத்திட்டு இருக்காதீங்க…
203 நாடுகள்ல இருக்கிற அம்பாசிடர்ஸ் எல்லாம் யாரு? 203 நாடு, அண்டார்டிகாவை தவிர. ஏன்னா, அங்க ஒரு நாடும் கிடையாது. ஆப்பிரிக்கா, சவுத் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, எல்லாத்துலயும் அம்பாசிடர்ஸ் இருக்கான். யாருன்னு வச்சி இருக்கான். உன்ன… 7என்னை…. யாராது ஒரு ஆள் இருக்கானா? இதான் சமூக நீதியா? அம்பேத்கர் என்ன சொன்னாரு? நம்ம அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்லுது?
203 நாடுகளிலும் உயர்சாதினு சொல்லப்படுற மக்கள் இருக்காங்க. என்ன நீதி இது? இதுதான் உங்க நீதியா? நாங்க எல்லாம் என்ன, நக்கிட்டு போறதா? வெரல வச்சுக்கிட்டு போறதா? சுதந்தரத்துக்கு போராடலையா? சும்மா ஏதோ கேள்வி கேட்கிறேன்…. தெனவெடுத்து போய் நான் ஒன்னும் உக்காருல… போராடுறேன், நடிகனா நின்னு போராடுறேன் ஜெயிலுக்கு போய் இருக்கேன் என தெரிவித்தார்.