
திமுகவின் உடைய மாவட்ட செயலாளர் கூட்டம் தற்போது டி நகரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகவினுடைய தலைவருமான மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழகம் செயலாளர்கள் மட்டுமல்லாமல் மாநில இளைஞரணி பொறுப்பாளர்களும் அங்கம் வகிக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மகளிர் உரிமை தொகை என பல்வேறு திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி இருக்கின்றோம் என்று பேசினார். இது மகளிர் இடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்றும், மேலும் செல்லும் இடங்கள் எல்லாம் மகளிரின் உண்மையான அன்பை காண்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.மேலும் இனி எந்த காலத்திலும் மகளிர் வாக்குகள் நமக்குத்தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் இல்லை
குறிப்பாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை திமுக உடைய தலைமையை பார்த்துக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். வெற்றி பெறுபவர்களே வேட்பாளர்களாக இருப்பார்கள். இவர் தான் இந்த தொகுதிக்கு என்று இல்லை. எனவே அனைவரும் கடுமையாக உழைங்கள். மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியிருக்கிறார்.