
பொதுவாக மாம்பழங்கள் என்பது பலருக்கும் பிடித்தமான ஒரு பழமாக இருக்கும். ஆனால் சீசன் டைம்களில் மட்டும் தான் மாம்பழங்கள் கிடைக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் மாம்பழப் பிரியர்கள் மாம்பழ ஜூசை விரும்பி குடிப்பார்கள். இந்நிலையில் மாம்பழ ஜூஸ் மாம்பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்று நினைக்கும் போது அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்ற கேள்வியும் பலருக்கு இருக்கலாம். இந்த நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் மாம்பழ ஜூஸ் தயாரிக்கும் ஒரு வீடியோ ஒன்று வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது மாம்பழங்களே இல்லாமல் அதில் மாம்பழ ஜூஸ் தயாரிக்கிறார்கள். இந்த வீடியோ மாம்பழ ஜூஸ் தயாரிக்கும் ஆலையில் எடுக்கப்பட்ட தாக கூறப்படும் நிலையில், அதில் செயற்கையான நிறமிகளை பயன்படுத்தி மாம்பழத்தைப் போன்ற மஞ்சள் நிற செயற்கை கலவையாயை உருவாக்குகிறார்கள். பின்னர் அதில் சர்க்கரையை கலக்கிறார்கள். இறுதியில் அதனை பேப்பர் பாக்கெட்டுகளில் அடைத்து விடுகிறார்கள். மேலும் இதுதான் உங்களின் மாம்பழ ஜூஸ் என்ற கேப்ஷன் உடன் அந்த வீடியோ பகிரப்பட்டு வரும் நிலையில் இதனை பார்த்த பலரும் மிகவும் அதிர்ச்சிகுள்ளாகி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram