
தமிழக அரசு பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் எண்ணத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு உதவித் தொகைகளையும் வழங்கி வருகின்றது. அந்த வகையில் மகளிர்காகவே செயல்படுத்தப்படும் சிறந்த திட்டங்களின் பட்டியல் பற்றி காணலாம்.
அதில் கடந்த சில மாதங்களுக்கு முன் மகளிருக்கு மாதம் ரூ 1000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் அனைத்து மகளிரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஒரு வீட்டில் 2 பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ 50,000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.
அதோடு பெண்கள் தங்கள் உயர் கல்வியை தொடர வேண்டும் என்பதற்காக மாதம் ரூ 1000 வழங்கப்பட்டு வருகின்றது. இது மட்டுமில்லாமல் பொருளாதார முன்னேற்றத்திற்கு சுய தொழில் தொடங்கும் மகளிர்க்கு மானியமாக ரூபாய் 50 ஆயிரம் வழங்கும் திட்டத்தையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.