
மதுரை அழகர் கோவிலில் சித்திரை திருவிழா மே 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கள்ளழகர் திருவிழாவில் தண்ணீரை பீய்ச்சி அடிக்க கோவில் நிர்வாகம் சில கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது.
அதிக விசை கொண்ட பம்ப் மூலம் தண்ணீரை அடிக்கக் கூடாது. ஜதீகத்தின் படி தோல் பையில் சிறிய குழாய் பொருத்தி நீரை பீய்ச்சி அடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திரவியங்கள், வேதிப்பொருட்கள் கலக்காத சுத்தமான தண்ணீரை மட்டுமே அடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.