அனைத்திந்திய இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் என்பது இந்தியாவில் உள்ள ஒரு பொது மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவமனை ஆகும். இது நாடாளுமன்ற சட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் முதன்மை மருத்துவ கழகங்களாக திகழ்கிறது. மேலும் இந்த மருத்துவமனை புதுடெல்லி, கோபால், புவனேஸ்வர் உட்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ளன. அந்த வகையில் மதுரை தோப்பூரில் 220 ஏக்கரில் ரூ.2021 கோடி மதிப்பில் எய்ம்ஸ் வளாகத்தின் கட்டுமானம் மே 22, 2024 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த கட்டுமானம் 2 கட்டங்களாக நிகழ்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதில் முதல் கட்டமாக கல்வி வளாகம், புற்றுநோயாளிகள் பிரிவு, மாணவர்கள் விடுதி, அலுவலக கட்டடங்கள் ஆகியவற்றை 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது 24 சதவீத வேலைகள் முடிவடைந்துள்ளது.

மாநிலங்களவையில் நடந்த கூட்டத் தொடரில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரிகள் மதுரையின் மருத்துவமனைக்கு கட்டடமே இல்லாத நிலையில் அட்மிஷன் மட்டும் நடந்தது தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜே.பி நட்டா கூறியதாவது, நிதி பிரச்சனை காரணமாக பணிகள் தாமதமானது. தற்போது முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடுத்து 3 ஆண்டுகளில் நிறைவடையும் என்று தெரிவித்துள்ளார்.