குஜராத் மாநிலத்தில் உள்ள வதாரா மாவட்டத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய மகளுக்கு 16 வயது ஆகும் நிலையில் ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஸ்கூட்டரில் வைத்து  தன்னுடைய தோழியை அழைத்து சென்றுள்ளார்.

இதனை அவருடைய தாய் கண்டித்துள்ளார். அதாவது எப்போதுமே உன் தோழி உன்னுடன் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு ஸ்கூட்டி எதுவும் இல்லையா.? எப்போதுமே எதற்காக உன்னுடன் மட்டுமே இருக்கிறார் என்றெல்லாம் கேள்வி எழுப்பி கிண்டலாக பேசியுள்ளார். தன்னுடைய தாய் கேலி செய்ததை அந்த சிறுமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த பெண் வீட்டிற்கு திரும்பிய போது தன் மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் இறப்பதற்கு முன்பாக எழுதிய ஒரு தற்கொலை கடிதம் சிக்கியது. இந்த கடிதத்தில் அம்மா எப்போதுமே உங்கள் மகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தம்பியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் நான் உங்களை விட்டு போகிறேன் லவ் யூ அம்மா என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.