
மாவீரன் படத்தின் இயக்குனர், லோகேஷ் கனகராஜ் குறித்து நேர்காணல் ஒன்றில் கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. அதற்குக் காரணம் அவரை தனித்துவமாக அடையாளப்படுத்தக்கூடிய அவருடைய படங்கள் தான். யாருடனும் உதவி இயக்குனராக பணி புரியாமல் தமிழ் சினிமாவிற்குள் வந்து இவ்வளவு பெரிய வெற்றி இயக்குனராக திகழும் லோகேஷ் கனகராஜ். தான் சினிமாவை கற்றுக் கொண்டதே நடிகர் கமலஹாசன் அவர்களிடம் இருந்து தான் என பல மேடைகளில் நாம் சொல்லிக் கேட்டிருப்போம்.
அந்த அளவிற்கு கமலின் மிகப்பெரிய ரசிகர். சமீபத்தில் கூட தனியார் தொலைக்காட்சி மேடை ஒன்றில் கமல் சாரோட ஆஸ்தான ரசிகன் நான் மட்டும்தான். அந்த இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன், சட்டையை கிழித்துக்கொண்டு சண்டைக்கு செல்வேன் என தெரிவித்திருந்தார்.

தற்போது அதை உண்மையாக்கும் விதமாக மாவீரன் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமல் சாரின் மிகப்பெரிய ரசிகன் அவரை யாரேனும் தவறாக கூறிவிட்டால், பெரிய சண்டையே அவ்விடத்தில் நிகழ நேரிடும்.
பல இடங்களில் தட்டுகள் எல்லாம் பறக்க விட்ட சம்பவங்களும் உண்டு. அவன் எப்படி அவரைப்பற்றி குறை கூறலாம் என்ன மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார். யாரிடமும் கமல் அவர்களை விட்டுக் கொடுக்க மாட்டார் என தெரிவித்துள்ளார். சட்டையை கிழித்துக்கொண்டு சண்டைக்கு செல்வேன் என்று அவர் மேடையில் கூறியது உண்மைதான் போல என நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை இது குறித்து தெரிவித்து வருகின்றனர்.
லோகேஷ் வெறித்தனமான #கமல் சார் ரசிகன் அவர பத்தி ஏதாவது பேசிட்டா போதும் அடிதடி சண்டையெல்லாம் போட்டு பிளேட்லாம் பறக்கும் நாங்க புடிச்சி இழுத்துட்டு வருவோம், கமல் சார் பத்தி தப்பா பேசுனா அவனுக்கு பொருக்காது எப்படிடா அவன் பேசலாம்னு சொல்லுவான் – இயக்குனர் @madonneashwin🔥@Dir_Lokesh pic.twitter.com/CWt8zr3WWm
— SundaR KamaL (@Kamaladdict7) July 13, 2023