ஈரோட்டில் நேற்று முன்தினம் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எங்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதில் கொள்கை ரீதியாக மாறுபட்ட கருத்து கிடையாது. அதே சமயத்தில் ஒரே நேரத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடினால் மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே தமிழகத்தில் படிப்படியாகத்தான் டாஸ்மாக் கடைகளை மூட முடியும். ஒரு இடத்தில் டாஸ்மாக் கடையை மூடும்போது அங்கு தவறு நடக்குமா என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளது. மதுக்கடையை மூடிவிட்டால் அங்கு வசிப்பவர்கள் குடிப்பதை நிறுத்திவிடுவார்கள் என்று கூற முடியாது.

மது கடைகளை மூடும்போது அவர்கள் அந்த பழக்கத்திலிருந்து வெளியேறுவதற்காக தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் குறித்து கணக்கெடுத்தால் அது விற்பனையை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கை என்று தவறாக நினைக்கிறார்கள். டாஸ்மாக் கடைகளில் தவறுகள் ஏதேனும் நடக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக கூட அதிகாரிகள் ஆய்வு செய்யலாம். தமிழகத்தில் மூடப்படும் மது கடைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் மூடப்படும் மதுபான கடைகள் குறித்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.