
மகராஷ்டிரா மாநிலம் அமராவதியில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி நடைபெற்ற பிரசாரத்தில், ராகுல் காந்தி பேசிருந்தார். அப்போது அவர் அதிபர் ஜோ பைடனையும், பிரதமர் மோடியையும் தொடர்பு படுத்தி பேசி இருந்தார். அதாவது சமீப காலமாகவே மோடி சொன்னதையே மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். எனக்கு ஏன் என்று தெரியவில்லை, ஒருவேளை அவருக்கு ஞாபகம் மறதி வந்து இருக்கலாம். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பின்னாலிருந்து ஒருவர் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். முன்னதாக உக்ரைன் அதிபர் அமெரிக்காவுக்கு வந்திருந்தார். அப்போது அவரை ரஷ்யா அதிபர் புதின் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிமுகப்படுத்தியிருந்தார்.
அப்போது அவர் தனது ஞாபகத்தை இழந்துவிட்டார். அதேபோன்று தனது பிரதமரும் ஞாபகத்தை இழந்து வருகிறார் என்று கூறினார். இந்நிலையில் இந்த கருத்துக்கு மத்திய அரசு, அமெரிக்காவிடம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளி உறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, நீண்டகால ஒற்றுமை, விடாமுயற்சி, மரியாதை மற்றும் இரு தரப்பு அரவணைப்பு போன்ற பன்முக கூட்டாண்மையை அமெரிக்காவுடன், இந்தியா பகிர்ந்து கொள்கிறது. இந்த சூழலில் இது போன்ற பேச்சுக்கள் அல்லது அறிக்கைகள் வருவது துரதிஷ்டவசமானது. இரு நாடுகளுக்கும் இடையேயான அன்பு ஒத்துப் போகவில்லை. இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இது பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.