
இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடக சூழலில், விருப்பங்கள் மற்றும் பின்தொடர்பவர்களை அதிகரிக்க பல இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், இலங்கையைச் சேர்ந்த பயண வலைப்பதிவர் முனேவ்வர் இசிக் நிஜாம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ரயிலில் ஸ்டண்ட் செய்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், ஓடும் ரயிலின் திறந்த கதவில் தொங்கியபடியே ஸ்டண்ட் செய்யும் அந்தப் பெண், திடீரென தடுமாறி கீழே விழும் நிலையில் தப்பிக்க முயற்சி செய்கிறார். இந்த காணொளி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
View this post on Instagram
முனேவ்வர் இசிக் நிஜாம், கடல், மலை, இயற்கை சுற்றுலா பகுதிகளில் தனது பயண அனுபவங்களை பகிரும் பிரபல வலைப்பதிவர் ஆவார். ஆனால், இந்த ரயில் ஸ்டண்ட் வீடியோவைப் பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்தனர். சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான பயனர்கள், “வீடியோக்கள் வைரலாக வேண்டுமென்று ஆபத்தான விஷயங்களை செய்வது சரியல்ல” என விமர்சனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் அந்த பெண் ரீல்ஸ் எடுத்த சம்பவம் மட்டுமே வைரலாகி வரும் நிலையில் அதிர்ஷடவசமாக அந்த பெண்ணுக்கு எதுவும் ஆகவில்லை.