
உலக அளவில் பச்சை, மஞ்சள் என்ற இந்த இரு நிறங்களிலும் பட்டாணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் நிதர்சனமான உண்மையாகும். கிமு நூற்றாண்டிலேயே மனிதர்கள் பச்சை பட்டாணியை சாப்பிட்டதற்கான ஆதாரம் இருக்கின்றது என கூறப்படுகின்றது.
பச்சை பட்டாணி உலகின் ஆரோக்கியமான உணவுகள் பட்டியலில் முக்கியமான இடத்தில் இருக்கும் ஒன்று. நார்ச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின்கள் என எத்தனையோ சொத்துக்களை கொண்டிருப்பது பச்சை பட்டாணி.
ஆனால் இந்த பச்சை பட்டாணி தற்போது நம்மை கொஞ்சம் கலங்கவும் வைத்துள்ளது. பச்சை பசேல் என்று தெரிவதற்காக இதில் கலக்கப்படும் ஒரு ரசாயனம் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது கொஞ்சம் நஞ்சம் அல்ல. மிக மோசமானதாக இருக்கும் என சொல்லப்படுகின்றது. இதில் சேர்க்கப்படும் ரசாயனத்திற்கு மிக முக்கிய காரணம் பச்சைபசேல் என்று தெரிந்தால் தான் பார்ப்பவர்களின் கண்களை ஈர்க்கும் என்பதுதான்.
இதில் மேலசைடு கிரீன் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. உலர்ந்த பட்டாணியை நீரில் ஊற வைத்து விடுகிறார்கள். அதில் மாலசைடு கிரீனை கலந்து நிறம் ஏற்றுகிறார்கள். உலர்ந்த பட்டாணி மட்டுமல்ல உலராத வகைகளிலும் கூட இந்த கலப்படம் நடக்கிறது. பச்சை மிளகாய், கோவக்காய் போன்றவற்றிலும் இதே ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இந்த கலப்பட உணவுகளை சாப்பிடுவதால் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என்று சொல்லப்படுகிறது.
மாலசைடு கிரீன் என்பது என்ன தெரியுமா.? கிராமங்களில் சாணம் தெளித்து வாசலில் கோலம் இடுவார்கள். சாணம் கிடைக்காததால் இதை கலர் பொடியாக எடுத்து தண்ணீரில் கலந்து வாசலில் தெளிப்பர். சில நாடுகளில் விஷ காளான்களை கொல்வதற்காக பயன்படுத்தப்பட்ட ரசாயனம் இது. ஆனால் 1990 ஆம் ஆண்டு இந்த ரசாயனம் உலக அளவில் தடை செய்யப்பட்டு விட்டது.
ஆனால் இதை தான் இன்று பட்டாணிக்கு பளீச் பச்சை நிறம் தர நிறம் ஏற்றியாக பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக நமக்கு புற்றுநோய் வரக்கூடிய அபாயம் உண்டு. மரபணுக்களில் மாற்றம் நிகழலாம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படவும் வாய்ப்புண்டு என கூறப்படுகிறது.
எத்தனை பிரஷ்ஷாக இருந்தாலும் கலப்படமாக இருந்தால் கண்டுபிடித்து விடலாம் ஒரு கைப்பிடி பச்சை பட்டாணியை எடுத்துக்கொண்டு தண்ணீரில் ஊற்றி அதில் பட்டாணியை போடுங்கள் சில நிமிடங்களில் அதிலிருந்து பச்சை நிறம் தெரிந்து வந்தால் அது கலப்படம் என்றே சொல்லப்படுகிறது.