LIC நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது பல்வேறு பாலிசிகளை கொண்டு வருகிறது. அதுபோன்ற பாலிசிகளில் ஒன்றை பற்றி தற்போது உங்களுக்கு கூறபோகிறோம். அந்த பாலிசியின் வாயிலாக உங்களுக்கு ரூ.91 லட்சம் முழுவதுமாக கிடைக்கும். LIC-ன் வழங்கும் இந்த பாலிசியினுடைய பெயர் “தன் வர்ஷா யோஜனா” ஆகும்.

இதில் அதிகமான பணம் முதலீடு செய்ய வேண்டாம். சிறுவயதில் இருந்தே முதலீடு செய்ய தொடங்கலாம். இதன் சிறப்பு என்னவெனில் இத்திட்டத்தில் நீங்கள் பெரும் நன்மைகளை பெறலாம். அதிலிருந்து நீங்கள் மிகச்சிறந்த பலன்களை பெறலாம். இது பங்குபெறாத, தனிநபர், சேமிப்பு, ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டம் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டையும் வழங்குகிறது.