உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டடமாக விளங்கும் ரீஜென்ட் இன்டர்நேஷனலின் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீனாவில் அமைந்துள்ள இந்த கட்டிடம் 675 அடி உயரம் கொண்டது. S வடிவில் வடிவமைக்கப்பட்டு 20,000 பேர் வசிப்பதற்கு ஏதுவாக கட்டப்பட்டுள்ளது. இது மேலும் 30,000 பேர் வரை தங்க வசதி கொண்டுள்ளது என்பதோடு, சுகாதார மற்றும் உயர்தர வசதிகளுடன் ஒரு பிரமாண்ட குடியிருப்பாக இருக்கிறது.

14.7 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கட்டிடம் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. இங்கு ஷாப்பிங் சென்டர்கள், உணவகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளும் உள்ளது. ஒரே கட்டடத்திற்குள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளும் கொண்டிருப்பது இதன் பிரதான சிறப்பம்சமாகும்.

இந்த வகை கட்டடம் நவீன தொழில்நுட்பங்களால் கட்டமைக்கப்பட்டு, அதில் வசிக்கும் மக்கள் வாழ்க்கையை மிகவும் வசதியான முறையில் கழிக்க முடியும். இதன் பிரமாண்டம் மற்றும் வசதிகள் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்து, இதுபோன்ற கட்டடங்கள் நகர்ப்புற வளர்ச்சியின் அடையாளமாக மாறி வருகின்றன.