தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்து வரும் பி.எல்.தேனப்பன், “ஸ்ரீ ராஜலக்ஷ்மி பிலிம்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல வெற்றி படங்களையும் தயாரித்து உள்ளார். கடந்த 1998ல் கமல்ஹாசன், பிரபுதேவா நடிப்பில் வெளியாகிய காதலா! காதலா! திரைப்படத்தின் வாயிலாக தேனப்பன் தயாரிப்பாளராக அறிமுகமாகி தொடர்ந்து பம்மல் கே. சம்மந்தம், பஞ்சதந்திரம், திவான், பிரியசகி, வல்லவன், துரை, அய்யனார், பேரன்பு ஆகிய பல படங்களை தயாரித்து உள்ளார். இந்நிலையில் அவர் கோடம்பாக்கத்தில் தன் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தை புதியதாக திறந்து உள்ளார். அலுவலக திறப்பு விழாவில் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் கலந்துகொண்டு வாழ்த்தினார்.