
இன்னும் இரண்டு நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில் இதுவரை பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு தாங்கள் வெற்றி பெற வேண்டி தங்களது வாக்குறுதிகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் விளக்கம் அளித்து வந்த நிலையில், சமூக ஊடகங்கள் வாயிலாக ஆன்லைன் இன்ஃப்லூயன்சர் மூலமாகவும் பிரச்சாரம் என்பது நடைபெற்று வந்தது. அந்த வகையில், பிரபல யூடியூபர் மதன் கௌரி அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் களம் காணும் முக்கிய வேட்பாளர்களை நேரில் சந்தித்து நேர்காணல் மேற்கொண்டு வருகிறார்.
அதேபோல பல பிரபல youtube சேனல்களும் இதே பாணியை கையாள, பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க கட்சியின் உறுப்பினர்களும், சினிமா பாடல்கள் வசனங்கள் என கிடைக்கின்ற வீடியோக்களை தங்கள் கட்சிக்கு ஏற்றார் போல் எடிட் செய்து பொதுமக்களிடையே வாக்குகள் கேட்கும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்களில் ஒருவர், இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி அவர்கள் சீமான் அவர்களுக்கு வாக்கு கேட்பது போல வீடியோ ஒன்றை எடிட் செய்து அதை இணையத்தில் பதிவிட, அது தற்போது வைரலாகி வருகிறது. அதில், விராட் கோலி மைக் ஒன்றை கையில் வைத்து சைகை ஒன்றை மேற்கொள்கிறார்.
அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஒலிவாங்கி சின்னத்தில் வாக்களிக்குமாறு விராட் கோலி அவர்கள் கேட்பது போல் சித்தரித்து வெளியிட்டுள்ளனர். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
View this post on Instagram