
தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் வினோத் டைரக்டில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியிருந்த துணிவு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையொட்டி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. ஜிப்ரான் இசையில் உருவாகியிருந்த இந்த படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களை குஷிப்படுத்தியது.
இந்நிலையில் அஜித்தின் துணிவு படம் ரிலீஸ் ஆகி 25 நாட்களை கடந்த நிலையில், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி வெளியாகியது. துணிவு படம் ஒரு பக்கம் ஓடிடியில் வெளியானாலும் இன்னமும் தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் இருக்கிறது.