
திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், வரலாற்றை அரையும், குறையுமாக பேஸ்புக்கிலும், ட்விட்டர் பக்கங்களிலும், முகநூல் பக்கங்களிலும், வருகின்ற செய்திகளை வரலாறாக எடுத்துக் கொண்டு, உளறி கொட்டிக் கொண்டிருக்கிற அண்ணாமலைகளே… கொஞ்சம் கவனமாக வரலாற்றை படித்துவிட்டு உளறி கொட்டுங்கள் என்ற வேண்டுகோளை திப்புவின் பேரவை மேடையில் இருந்து உங்களுக்கு நான் முன் வைக்கின்றேன்.
1790 ஆண்டு பிரிட்டிஷ் பிரான்ஸ் அரசுகளுக்கு எதிராக உலகின் முதல் ராக்கெட் ஏவுகணைகளை…. உலகிலேயே நீங்க எண்ணி பாருங்க…. உலகத்தில் முதல் ராக்கெட் ஏவுகணைகளை இந்த உலகத்தில் அறிமுகப்படுத்திய மகத்தான வீரன். அந்த ஏவுகணைகள் அப்பாவி பொது மக்கள் மீதும், குழந்தைகள் மீதும், தாய்மார்கள் மீதும், கர்ப்பிணிகள் மீதும், வயதானவர்கள் மீதும், ஊனமுற்றவர்கள் மீதும், விழுந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு போரை நடத்திய மகத்தான தலைவன் என்று வரலாற்று பக்கங்களில் பதிவு செய்யும்.
இந்துக்களின் புகழ்பெற்ற கோவில் சாரதா தேவி கோயிலை மறு நிர்ணயம் செய்ய முழு பொருள் உதவியும், லட்சக்கணக்கான ரூபாயும்… செல்வந்தராக தங்கம், வைரம், வைடூரியம், கோமேதகம் என்று அத்தனையும் தன் அரண்மனையில் அடுக்கி வைத்து அழகு பார்க்கவில்லை. அள்ளி இந்துக்களுக்கு கொடுத்திட்டவன்…. இந்து கோயில்களை புராணமைத்துக் கொள்வதற்கு வழங்கிய வள்ளலாகவும், எங்கள் முப்பாட்டன் திப்பு விளங்கி இருக்கிறான் என்பதை இன்றைய கத்துக்குட்டிகள் தயவுசெய்து அண்ணாமலைகளே புரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்தார்.