
காஷ்மீரில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆபத்து ஏற்படும் மாவட்டங்கள் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் அடிக்கடி பனிச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகள் உள்ளன. இதனால் சாலைகளில் பனி படர்ந்து போக்குவரத்து பாதிப்பு அவ்வபோது ஏற்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் அடுத்த 24 மணி நேரத்தில் பனிச்சரிவு ஏற்படக்கூடிய மாவட்டங்கள் குறித்து அறிவிப்பை ஜம்மு காஷ்மீரின் பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்த செய்திகள் நடுத்தர மட்டத்தில் ஆபத்துக்கள் ஏற்படுத்தக்கூடிய பனி சரிவானது அனந்த்நாக், தோடா, பாராமுல்லா, கந்தர்பால், குப்வாரா, குல்காம், பந்திப்பூர் கிஷ்த்வார், பூஞ்ச் உள்ளிட்ட மாவட்டங்களில் 2000 முதல் 2500 மீட்டர் உயரத்தில் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்த மட்டத்திலான ஆபத்து ஏற்படுத்தக்கூடிய பனி சரிவானது ரியாஸி, ரஜோரி, ராம்பன் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஏற்படுத்தக் கூடும் என்று தெரிவித்துள்ளது.