மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கமல்ஹாசன் மீண்டும் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பெயரை முன்மொழிந்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காகவும், வரும் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையிலும் கமல்ஹாசனின் தலைமையே கட்சிக்கு தேவை என்ற கருத்து பொதுக்குழு உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது.

கமல்ஹாசன் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சியில் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இதனை வரவேற்றுள்ளனர். வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.