
தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரிமங்கலம் ஒன்றிய திமுக செயலாளராக இருந்து வருபவர் அடிலம் அன்பழகன். வேளாண்மை த்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான இவர், அந்த பகுதியில் ஜவுளிக்கடை வைத்திருக்கிறார்.
இதனிடையே பிரபல துணிக்கடைக்கு அன்பழகன் ரூ10 லட்சம் தொகை தர வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொடுத்த கடனை திருப்பி கேட்பதற்காக வந்தவர்களை அன்பழகனும், அவரது ஆட்களும் தரக்குறைவாக திட்டி, கடுமையாக தாக்கியதாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
திமுக காரி ஒன்றிய செயலாளர் அடிலம் அன்பழகன் தான் தர வேண்டிய பணத்தை கேட்டு வந்தவர்களை தாக்கும் காட்சி @tnpoliceoffl @CMOTamilnadu https://t.co/GQ0M7e9z88 pic.twitter.com/SWIQUvgyKw
— Savukku Shankar (@SavukkuOfficial) March 20, 2023