
துருக்கி, சிரியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு கீழ் ஈடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருபவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலநடுக்கத்தினால் 4,300 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் கோல்பாசி நகரில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் 5.5 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது 9.46 மணிக்கு நூராக் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. மேலும் நேற்று 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட இன்று 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டு வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.