
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வில் தேர்வர்களின் பதிவெண் மாறியதால் குளறுபடி ஏற்பட்டு தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டது. தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டதால் குரூப் 2, 2ஏ தேர்வு ரத்து செய்துவிட்டு வேறொரு நாளில் வைக்க வேண்டும் தேர்வை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு டிஎன்பிஎஸ்சி தற்போது விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது வினாத்தாள் அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தவறே குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுக்கான குளறுபடிகளுக்கு காரணம் என்று தெரிவித்துள்ளது. வினாத்தாள் அச்சடிக்கும் ஒப்பந்த நிறுவனம் அவுட்சோர்சிங் விட்டதும் குளறுபடி ஏற்பட காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் கொடுத்துள்ளது.