
ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் ராணுவ அதிகாரிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த திங்கள் கிழமை பயங்கர துப்பாக்கி சூடு சண்டை நடைபெற்றது. இதில் பலத்த காயம் அடைந்த ஒரு ராணுவ அதிகாரி உட்பட 5 ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் தற்போது ஒரு ராணுவ அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் தோடா நகரில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் இந்த துப்பாக்கி சூடு சண்டை நடைபெற்ற நிலையில் ஒருவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.