
கள்ளக்குறிச்சியில் விஷச்ராயம் குடித்து பலர் உயிரிழந்த நிலையில் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்வைத்திருந்தனர். இதற்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். அதாவது சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகியோர் தங்களுடைய குற்றசாட்டுகளை உண்மை என நிரூபித்தால் நாங்கள் பதவி விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் தற்போது அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுகவை தொடர்பு படுத்தி பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு நஷ்ட ஈடாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.