
தலைநகர் டெல்லியில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாகிஸ்தான் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது.
இதைத்தொடர்ந்து இன்று தலைநகர் டெல்லியிலும் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்ட நிலையில் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளிவந்துள்ளது.