சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூபாய் 1000ல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்தி வழங்க சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  இதன்படி முதியோர் – ஆதரவற்றோர், கைம்பெண் உதவித்தொகையை ரூபாய்  1000ல் இருந்து ரூபாய்  1200 ஆக்கவும்,  மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூபாய் 1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சற்று முன் தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது.