ஜியோவும், ஹாட் ஸ்டார் ஒன்றாக இணைந்து செயல்பட இருக்கின்றது. இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் டொமன் துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவர் மற்றும் சிறுமியிடம் இருப்பது தெரியவந்தது. இது மிகப்பெரிய பேசப் பொருளாக மாறிய நிலையில் இந்த சிறுவர்களுக்கு டொமனை எங்களுக்கு தாருங்கள் என பலரும் இ-மெயில் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் மெயில் அனுப்பியவர்கள் உண்மையாக தான் தங்களிடம் அணுகுகிறார்களா என்பதை பரிசோதிக்க நினைத்த சிறுவர்கள் தங்களுக்கு வந்த மெயில்களை ஆராய்ந்துள்ளனர். அதில் சிலர் அனுப்பியது போலி மெயில் என்பது தெரியவந்தது. மேலும் சிலர் சீரியஸாக வாங்கவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் அதிக அளவில் பணம் தருவதாகவும் அந்த ஈமெயிலில் கூறியுள்ளனர்.

இந்த ஆஃபர்கள் வந்த போதிலும் நாங்கள் ஒருபோதும் விற்பனை செய்யவில்லை என்று அந்த சிறுவர்கள் கூறியுள்ளனர். மேலும் ஜியோ ஹாட்ஸ்டார் இணைப்பு தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுப்பப்பட்ட போது நாங்கள் அனைத்து குழப்பத்திற்கும் பதில் அளிக்க விரும்புகிறோம் என்று கூறி நாங்கள் டெவலப்பருக்கு சப்போர்ட் செய்து எங்களுடைய சேவை பயணத்தை பகிர வேண்டும் என்பது மட்டும்தான் எங்களுடைய நோக்கம். அனைத்து ஆலோசனைகளும் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் ரிலையன்ஸ் அணி விரும்பினால் இது அவர்களுக்கான சிறந்த டொமனாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஜியோ ஹாட்ஸ்டார்.காம் அவர்களுக்கு இலவசமாக கொடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். இதை முறையான ஒப்பந்தங்களில் அடிப்படையில் கொடுக்க விரும்புகிறோம். மேலும் இது ஒட்டுமொத்தமாக நாங்கள் முடிவு செய்தது. அதோடு ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருந்தோ எந்த ஒரு சட்டம் தொடர்பான குரூப் தொடர்பு கொண்டு எங்களை வற்புறுத்தியோ நாங்கள் இந்த முடிவுக்கு வரவில்லை. நண்பர்கள், குடும்பம் அல்லது மற்ற யாரிடம் இருந்தோ எந்தவித அழுத்தம் இல்லாமல் எங்களுடைய சொந்த முடிவாக இதை கூறுகிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதிக ஓடிடி தளங்களின் வருகையால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தியாவில் தங்களது வாடிக்கையாளரை இழந்துள்ளது.

ஆகவே அம்பானியின் ரிலையன்ஸ் நடத்தும் ஜியோ சினிமாவுடன் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் இணையும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த 2 தளங்களும் இணைந்தால் அதற்கு ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பெயர் வைக்கப்படும். யாரும் எதிர்பாராத வகையில் ஜியோ ஹாட்ஸ்டார் துபாயை சேர்ந்த இருவருக்கு டெவலப்பர் ரூபாய் 1 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். அந்த இருவரும் குழந்தைகள் என்பது இந்த விவகாரத்தை அதிக சுவாரசியமாக்கியுள்ளது. துபாயில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜைனம் மற்றும் ஜீவிகா என்ற சகோதர, சகோதரி இதனை ரூபாய் 1 கோடிக்கு வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.