ஆனந்த் அம்பானி திருமண வைபோகம் விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண விழாவில் பல பிரபலங்களும் மும்பையில் குவிந்தனர். திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டங்கள் சொகுசு கப்பல்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு இலவசமாக மூன்று மாத ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ வழங்குவதாக போலியான மெசேஜ் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்தியில் எழுதப்பட்ட இந்த மெசேஜ் இலவச ரீசார்ஜ் சலுகையை பெறுவதற்கு ஒரு லிங்கை கிளிக் செய்ய வேண்டும் என பயனர்களுக்கு அறிவுறுத்துகிறது. இது முற்றிலும் போலியானது எனவும் ஜியோ நிறுவனம் பயனர்களுக்கு எந்த வித இலவச ரீசார்ஜ் திட்டத்தையும் வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இது போன்ற செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.