ஜெயிலர் படத்திற்கான மூன்றாம் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கான இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்,
படத்திற்கான மூன்றாவது பாடலான ஜுஜுபி நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. படத்திற்கான ஆடியோ லான்ச் ஜூலை 28ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு முன்பாகவே மூன்று பாடல்கள் வெளியாகிவிட்டால், இன்னும் எத்தனை பாடல்கள் படத்தில் இடம்பெற்றிருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே தற்போது எழுந்துள்ளது.
#JailerThirdSingle dhana venum? Adhelam #Jujubee matter😎💥 Releasing Tomorrow at 6 PM
🎵@anirudhofficial
🎤@talktodhee
✍🏻@soupersubu@rajinikanth @Nelsondilpkumar #Jailer pic.twitter.com/8Jb0LeGhzD— Sun Pictures (@sunpictures) July 25, 2023