தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் எஸ்வி சேகர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரை குறைவாக விமர்சிக்கப்பட்டதை தனது முகநூலில் பகிர்ந்து இருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் புகார் அளித்திருந்தார். அதன்படி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் சிறை  தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை நீதிபதி வழங்கினார். அதாவது நீதிபதி கூறியதாவது, நடிகர் எஸ்.வி சேகருக்கு வழங்கிய ஒரு மாத சிறை தண்டனை உறுதி செய்து மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்துள்ளது என்று கூறினார்.